காணாமல் போன இளம்பெண்…. குக்கரில் வேக வைத்த தலை…. விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

ஆசியாவில் இளம் பெண்ணை கடத்தி உடலை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தான் பகுதியை சேர்ந்தவர் ரூஸ்லன் (28 வயது). இவர் அப்பகுதியில் மருந்தளராக  வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் கடந்த வாரம் அதே பகுதியில் உள்ள அயலான் எடிலோவா (19 வயது) என்ற பெண்ணை கடத்தி சென்று அவரது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் அந்த பெண்ணின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு பைகளில் போட்டு கட்டி வைத்துள்ளார். அதில் சிலவற்றை  அங்குள்ள குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார்.

இதனிடையே தனது மகள் காணாமல் போனது குறித்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த விசாரணையில் காவல்துறையினருக்கு ரூஸ்லன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சோதனை செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது போலீசாரை கண்டு பயந்துபோன ரூஸ்லன் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

அவரை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் அவர் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையின் போது குக்கரில் வேக வைத்த ஒரு தலையும், பல்வேறு பைகளில் போட்டு வைக்கப்பட்டிருந்த பற்களும், நகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த உடல்பாகங்கள் அனைத்தும் அயலான் எடிலோவா என்பவரது தான் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் இருக்கும் ரூஸ்லனை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டால் உண்மைகள் அனைத்தும் தெரியவரும் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.