காட்டுமிராண்டி கூட்டம்… நையா பைசா தரலையே…! எச்.ராஜா தாறுமாறு விமர்சனம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச் .ராஜா, சென்ற ஆண்டு பொங்கலுக்கு பொங்கல் தொகுப்போடு 2500 ரூபாய் ஒரு ஒவ்வொரு கார்டுக்கும் மாநில அரசு கொடுத்தது. ஆனால் அதை ஐந்தாயிரம் ரூபாய்யாக  கொடுக்க வேண்டும் என்று கேட்ட இன்றைய  முதலமைச்சர் பொங்கலுக்கு வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் கொடுத்துறிக்கிறார். ஒரு நையா பைசா காசு எதுவும் கொடுக்கவில்லை.

ஆனால் அந்த பொங்கல் தொகுப்பும் எப்படி வழங்கப்பட்டு இருக்கிறது ?  என்றால் மிளகுக்குப் பதிலாக இலவம்பஞ்சு கொட்டையும், மிளகாய் தூளுக்கு பதிலாக மரத்தூளும் அதில் பல்லி, பாச்சான், சிரஞ்சி இந்த மாதிரியா முழுக்க முழுக்க  கலப்படமான பொருட்களை பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடுத்து இருக்கின்ற ஒரு அரசாங்கமாக இந்த அரசாங்கம்  இருக்கிறது.

இவ்வகையான பொருள்களில் கலப்படம் செய்வது உயிருக்கு ஆபத்து இல்லையா ? ஆகவே அனைத்து சப்ளையர்சும் தமிழ், தமிழ், தமிழ்நாடு  என்று ஓங்கி சத்தம் போடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கும் விரோதிகள், தமிழுக்கும் எதிரிகள்  இந்த திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் தான். ஏனென்றால் ஈவேரா பற்றி அனைவருக்கும் ஏற்கனவே  தெரியும். தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறிய காட்டுமிராண்டிக் கூட்டம் அவர்கள் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *