காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்ற வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியேரி பகுதியில் எலக்ட்ரீசியனான காந்தி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு காந்திசெல்வன் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காந்திசெல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் காந்தி செல்வனுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.