கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தங்கள் உறவுகளை இழந்த துக்கம் தாங்காமல் கருணாபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் அரசு தரும் நிதி உதவி வேண்டாம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.