காங்., திமுக முக்கிய புள்ளிகளை குறிவைக்கும் EPS…? சூடுபிடிக்கும் அரசியல் வட்டாரம்…!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி ஆரம்பமாகிறது.

இந்நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக இபிஎஸ் கட்சி மூத்த தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், திமுக கூட்டணி வலுவாக இருப்பதால், அதன் பலத்தை உடைத்து அதிமுக வெற்றிபெற வேண்டும். குறிப்பாக தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஈரோட்டில் இருக்கும் காங்., திமுக முக்கிய புள்ளிகளை அதிமுகவில் இணைக்க வேண்டும் என இபிஎஸ் உத்தரவிட்டுள்ளாராம். இதனால், தேர்தலுக்கு முன் பல திருப்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply