காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு…. ராஜினாமா செய்த ஹர்திக் படேல்….!!!!!!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகுவதாக இன்று ஹர்திக் படேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் தேவேந்திர பாய் படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கின்றது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக முயற்சி செய்து வருகின்றது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை படேல் சமூகத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

இவர்களின் ஓட்டுகளை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும் என்று கருதப்பட்டு வருகிறது. சமூகத்தை சேர்ந்த ஹர்திக் படேல் சில ஆண்டுகளுக்கு முன் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது  குறிப்பிடத்தக்கதாகும். இதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களின் முயற்சி காரணமாக ஹர்திக் பட்டேல் 2019ஆம் ஆண்டு அந்த கட்சியில் இணைந்துள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களாக  காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தியில் இருந்து வந்த ஹர்திக் படேல் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் இருந்து குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் என்ற தன் சுயவிபரத்தை விலக்கி  இருக்கின்றார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்று  ஹர்திக் பட்டேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து அதிலிருந்து நான் விலகி இருக்கின்றேன்.

இதனை சங்க நிர்வாகிகள் மற்றும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன். மேலும் எதிர்காலத்தில் மாநிலத்தில் நலனிற்காக உழைக்க விரும்புகின்றேன் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த வருடம்  இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த  நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஹர்திக் பட்டேல் விலகி இருப்பது அந்த கட்சியினருக்கு  பெரும் பின்னடைவாக  இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *