மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முப்படைகள் ஆள் தேர்வுக்கு பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறியுள்ளார். டெல்லியில் இது தொடர்பாக பேசிய அவர், அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்த எந்த தேவையும் ஏற்படவில்லை. இதனால் மத்திய அரசு சிறிது நிதியை சேமிக்குமே தவிர அந்தத் திட்டத்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்த பயனும் இல்லை. அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.