தமிழ் சினிமாவின் பிரபல பாடகியான சின்மயி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வைரமுத்துவின் மீது “மீ டு” பாலியல் புகாரளித்தார். வைரமுத்து அனுப்பிய மெயில் உள்ளிட்டவற்றையும் சமூகவலைதளங்களில் வெளியிட்டு அவர் மீது குற்றம்சாட்டினார். அதோடு கவிஞர் வைரமுத்துவால் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். சின்மயி மட்டும்மின்றி பலர் வைரமுத்து மீது குற்றம்சாட்டினர்.

அதன்பின் சினிமா துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்த பல விஷயங்கள் வெளியே வந்தது. இந்நிலையில் பிரபல பாடகியான புவனா சேஷனும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து உள்ளார். இதுபற்றி புவனா சேஷன் பேட்டி அளித்ததாவது “17 பெண்கள் வைரமுத்திற்கு எதிராக பாலியல் குற்றசாட்டை முன்வைத்திருக்கின்றனர். எனினும் 4 பேர் மட்டுமே தைரியமாக தங்களது பெயரையும் முகத்தையும் வெளியுலகத்திற்கு காட்டியுள்ளனர்.

என்னுடைய கதையை நான் பகிர்வதற்கு காரணம் இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. தனக்கு நேர்ந்ததை போன்று பிற பெண்களுக்கு நடக்க நான் விரும்பவில்லை. இச்சம்பவத்தில் பல்வேறு பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் இது தொடர்பான விசாரணை என்பது நடக்க போவதில்லை, நடத்தவும் விடமாட்டார்கள்” என அவர் கூறினார்..