
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பண போலீசார் ஈடுபட்டிருந்தனர். அங்கு கிரிவலப் பாதையில் சிறப்பு எஸ்ஐ ஜெய பாண்டியன் என்பவர் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது 14 வயது சிறுமி ஒருவர் கழிவறைக்கு சென்றார்.
அந்த சிறுமியிடம் ஜெய பாண்டியன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல அமைப்பு மற்றும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஜெய பாண்டியன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. மேலும் இதைத் தொடர்ந்து போக்சோ வழக்கின் கீழ் ஜெயபாண்டியனை கைது செய்த காவல்துறையினர் அவரை பணியிடை நீக்கம் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.