தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 49 பேர் பலியான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் இன்று கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதோடு தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பது தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டது. அப்போது பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும் அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள்  குண்டுகட்டாக தூக்கி செல்லப்பட்டு சபையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.