விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம் 8 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போய்ஜி கள்ளச் சாராயம் விற்று 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான அமரன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில், கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய சோதனையில் 1,558 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 19,028 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 4720 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தகவல் தெரிவித்துள்ளார்.