கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 42 க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்ற மல்லிகா (42) என்பவர் கைது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட சாராயம் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளச்சாராயத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.