கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம் முடிவதற்குள்….. மேலும் ஒரு மாணவி தற்கொலை….. அதிர்ச்சி….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக நேற்று பயங்கர போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்த பென்ச், சார் உள்ளிட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து எறிந்தனர். காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சி மேற்கொண்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம் அடங்குவதற்குள் மற்றொரு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கோகுலவாணி பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது மாணவி மீட்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சினையால் மாணவி தற்கொலைக்கு முயன்றதாகவும் இதில் அவருக்கு கால்முறிவு மற்றும் தாடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *