கள்ளகாதலுக்காக குழந்தைகளை கொன்ற கொடூரத்தாய்…. செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

பெற்ற குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்த தாயின் செல்போனில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே உள்ள கிராமத்தில் ஜெகதீஷ்-கார்த்திகா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சஞ்சனா (4) என்ற மகளும், சரண் (1) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் ஜெகதீஷ் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகா மாயவரம் பகுதியில் வசிக்கும் 25 வயது வாலிபரை காதலித்தார். அந்த வாலிபர் கார்த்திகாவுக்கு திருமணம் ஆகவில்லை என நினைத்து பழகியுள்ளார். இவர்கள் 2 பேரும் மூன்று மாதங்களாக பழகி வந்த நிலையில், கார்த்திகாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது வாலிபருக்கு தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வாலிபர் கார்த்திகாவை விட்டு விலக ஆரம்பித்துள்ளார். எனவே கார்த்திகா வாலிபரை விட்டு விலகக்கூடாது என்பதற்காக பெற்ற குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனால் சரண் மற்றும் சஞ்சனா இருவருக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்து உள்ளார். இதில் குழந்தை சரண் பரிதாபமாக உயிரிழந்தது. இவருடைய மகள் சஞ்சனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இதுகுறித்து மார்த்தாண்டம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கார்த்திகாவை கைது செய்து விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் கார்த்திகாவின் செல்போனை வாங்கி பார்த்துள்ளனர். அதில் கார்த்திகாவின் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.

அதாவது கார்த்திகா குளிக்கும்போது உடை மாற்றும் போது என தன்னுடைய ஆபாசப் படங்களை வீடியோவாக எடுத்து வாலிபருக்கு அனுப்பியுள்ளார். இவர்  வாலிபருடன் ஒரு நாளைக்கு 15 தடவைக்கு மேல் செல்போனில் பேசியது தெரியவந்தது. இதன் காரணமாக காவல்துறையினர் வாலிபரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கார்த்திகா வாலிபருக்கும் குழந்தைகள் இறந்ததற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே அவரை விட்டு விடுங்கள் என்னை தண்டியுங்கள் என கூறியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட கார்த்திகாவை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *