நெல்லை கூடன்குளம் அணுமின் நிலையத்தின் சமூக நலத்திட்டத்தின் கீழ் கூடன்குளத்தில் நடமாடும் மருத்துவம மையம் தொடக்கவிழா, 10,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை , அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடந்தது.

இவ்விழாவில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது “முதல்வர் ஸ்டாலின் சமூக நீதியை கடைப்பிடித்து வருவதன் விளைவாக தமிழக கல்வித் துறை வெகுவாக முன்னேறி இருக்கிறது. இந்திய அளவில் பட்டபடிப்பு கற்றவர்கள் எண்ணிக்கையானது சராசரி 34% ஆக இருக்கிறது. இவற்றில் தமிழகத்தில் பட்டம் படித்தவர்கள் எண்ணிக்கை 51.6% ஆக உள்ளது. இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது. இது தான் திராவிட மாடல் ஆட்சி ஆகும்” என்று அவர் பேசினார்.