கல்வியில் பின் தங்கிய தமிழகம்…. மாணவர்களின் மோசமான நிலை…. பெரும் அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!

தமிழக பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் தேசிய அளவில் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் 22 மாவட்டங்களை சேர்ந்த 1.26 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். 3,5,8 மற்றும் பத்தாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தை தவிர அனைத்து பாடங்களிலும் பின்தங்கி உள்ளது தெரியவந்துள்ளது.

முன்னணி மாநிலமாக தமிழகம் பள்ளிக் கல்வியில் பின்தங்கியுள்ளது புறக்கணிக்கக் கூடிய விஷயமல்ல. கொரோனா காலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப் பட்ட சமயத்தில் இணையம் மற்றும் மொபைல் வசதி இல்லை என்பது ஒரு காரணம் என்றாலும், இது நமது கல்வி கட்டமைப்பில் உள்ள அடிப்படை பிரச்சினையை வெளிப்படுத்துகின்றது. கடமைக்காக கற்பிக்கும் ஆசிரியர்கள், புரிந்து கொள்ளாமல் மதிப்பெண்ணுக்கு படிக்கும் மாணவர்கள், திசை திருப்பும் டிஜிட்டல் உலகம் என இதற்குப் பல காரணங்களும் இருக்கலாம்.

தமிழக பள்ளி மாணவர்கள் 2017ஆம் ஆண்டில் இருந்ததைவிட 2021 ஆம் ஆண்டில் கல்வியில் மிகவும் பின் தங்கி இருப்பது தேசிய அளவிலான ஆய்வில் தெரியவந்துள்ளது. பத்தாம் வகுப்பு அறிவியலில் 85 சதவீதம் பேருக்கு அடிப்படையே தெரியவில்லை, கணிதத்தில் 92 சதவீதம் பேர் அடிப்படை நிலையிலேயே உள்ளனர். 8 ஆம் வகுப்பில் கணக்கில் 90% பேருக்கும், சமூக அறிவியலில் 92 சதவீதம் பேருக்கும், அறிவியலில் 86 சதவீதம் பேருக்கும், மொழிப்பாடத்தில் 79 சதவீதம் பேருக்கும் திறன் குறைவாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *