திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி (22) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதில் ஜெனிபர் மிகுந்த மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 17ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜெனிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் இது தொடர்பாக திண்டுக்கல் ஆர்டிஓ மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.