நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் 600-க்கு 546 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த மாணவி நந்தினி என்பவருக்கு மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் B.Com  பாடப்பிரிவில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இணையதள கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் மாணவியால் கல்லூரியில் சேர முடியாமல் போனது.

இது தொடர்பாக செய்தி வெளியானதை அடுத்து அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா போன்றோரின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது மாணவி நந்தினிக்கு மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் B.Com பாடப்பிரிவில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.