கல்லூரிக்கு வர சொல்லிருக்காங்க…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள குரங்குசாவடி பகுதியில் செல்லம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமொழிசெல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு டிப்ளமோ மெக்கானிக் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மணிமொழிசெல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக மணிமொழிசெல்வனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சூரமங்கலம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கல்லூரியிலிருந்து செல்லம்மாளுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் வருகிற 20-ஆம் தேதி தேர்வு நடைபெற இருப்பதால் மணிமொழிசெல்வனை கல்லூரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர். இதனை செல்லம்மாள் தனது மகனிடம் தெரிவித்த பிறகே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். எனவே மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *