தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 21-ஆம் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக மாணவி புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரிக்கு போகவில்லை. வீட்டிற்கும் திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவியை தேடி வருகின்றனர். அவர் காணாமல் போய் பத்து நாட்கள் கடந்தது. இதனால் மனைவியின் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர். போலீசார் தொடர்ந்து மாணவியை தேடி வருகின்றனர்.