கல்லூரிக்கு கலெக்டர் தீடீர் விசிட்….உற்சாகத்தில் மாணவர்கள்…!!!

முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான வெள்ளை நிற கோட் மற்றும் மருத்துவ உபகரணங்களை தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கியுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ படிப்பு பயிலும் 93 மாணவ மாணவியர்களுக்கு வெள்ளை நிற கோட் மற்றும் மருத்துவ படிப்பிற்கு தேவையான உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி வழங்கியுள்ளார். இதில் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 மாணவ, மாணவியர்களும் அடங்கும். அவர்களுக்கும் வெள்ளை நிற கோட்,  புத்தகங்கள் மற்றும் மருத்துவ படிப்பிற்கான உதவி உபகரணங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 87 மருத்துவம் பயிலும் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கும் இந்த உபகரணங்கள் மற்றும் வெள்ளை நிற கோட் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதலாமாண்டு மருத்துவம் பயிலும் 93 மாணவ, மாணவியர்களும், ஹிப்போகிரடிக்  என்ற உறுதி மொழியினை ஏற்று கொண்டனர்.