உத்திர பிரதேசத்தில் ஒரு இளம் பெண்ணுக்கும் வாலிபருக்கும் ஐந்து நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் புது மணப்பெண் தனது மாமியார் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தண்ணீர் சுட வைக்கும் எந்திரம் வெடித்தது. இதனால் புதுமணப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீண்ட நேரமாகியும் இளம்பெண் வெளியே வராததால் அந்த பெண்ணின் கணவரும் உறவினர்களும் அவரை அழைத்தனர். ஆனால் அவர் எந்த பதிலும் சொல்லவில்லை.

இதனால் குளியலறை கதவை உடைத்து உள்ள சென்று பார்த்தனர். அப்போது அந்த பெண் தரையில் மயங்கி கிடந்ததை பார்த்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இளம்பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.