“கல்யாணத்துக்கு முன்னாடி இத மட்டும் பண்ணுங்க விக்கி”… நயன் ரசிகர்கள் கோரிக்கை…!!!!!

நயன்தாராவின் ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றிய பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்த நிலையில் தற்போது லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தின் ரிலீஸ் அன்று விக்கியும் நயனும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி விக்கியும் நயனும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில் சென்ற சனிக்கிழமையும் திருப்பதி கோவிலுக்கு சென்று நயனும் விக்கியும் திருமணத்திற்கான முன்பதிவு ஏற்பாடுகளை செய்ததாக சொல்லப்படுகின்றது. இதையடுத்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு அருகில் இருக்கும் ரிங் ரோட்டில் உள்ள மடம் ஒன்றில் இருவருடைய திருமணமும் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகின்றது. மேலும் இருவரும் இம்மடத்தை தங்களின் திருமணத்திற்காக முன் பதிவு செய்திருப்பதாக செய்தி பரவி வந்தது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றார். இதை பார்த்த ரசிகர்கள் உங்கள் கண்களிலேயே காதல் தெரிகின்றது. நயன் கொடுத்து வைத்தவர். அவரை நல்லபடியாக பார்த்துக்கோங்க. நாயனை பார்த்தால் பாவமாக உள்ளது. நயன் எலும்பும் தோலுமாக இருக்கின்றார். அவர் முன்ன மாதிரி தற்பொழுது வசீகரம் இல்லை. திருமணத்திற்கு முன்பாக நன்றாக சாப்பிட வைத்து வெயிட் போட வையுங்கள். அவர் லைட்டா சப்பியா இருந்தால்தான் அழகு என கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *