கல்குவாரி விபத்து…. 2 பேர் உயிரிழப்பு…. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!!!!!

கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை  அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14.05.2022 அன்று  திடீரென்று மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சையில் இருக்கின்றனர். மேலும் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த விபத்தில் அரியகுளம் கிராமம் அழகர் குளத்தைச் சேர்ந்த பரமசிவன்  என்பவரின் மகன் முருகன் (வயது 23). நாங்குநேரி இளையார் குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் செல்வன் (வயது 25) ஆகிய இருவரும் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி வேதனை அளிக்கின்றது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டு இருக்கிறேன். இதுதவிர தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா 5 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *