கலை அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் கவனத்திற்கு..!

அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மே 8 முதல் 22ஆம் தேதி வரை அரசு கலை கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை விண்ணப்பம் பெறப்பட்டது. 164 அரசு கலை கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்களுக்கு மூன்று லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில் அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதனை தொடர்ந்து வருகின்ற 30ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி முதல் கட்ட  பொது கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் மாதம் 22 ஆம் தேதி தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Leave a Reply