தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த டெல்லி கணேஷ் நேற்று உடல் நலகுறைவினால் இரவு 11:30 மணியளவில் சென்னை ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு 81 வயது ஆகும் நிலையில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவர் கடந்த 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்தார்.
கடந்த 1976 ஆம் ஆண்டு இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் டெல்லியில் உள்ள ஏர்போர்ஸில் பணிபுரிந்தவர். இவர் முதல் முறையாக டெல்லி நாடக குழுவில் இணைந்து நடித்தார். இதன் காரணமாக கே. இயக்குனர் கே. பாலச்சந்தர் டெல்லி கணேஷ் என்ற பெயர் சூட்டினார். இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு கலைமாமணி விருதும் வென்றுள்ளார். இவர் சமீபத்தில் வெளிவந்த அரண்மனை 4, ரத்னா மற்றும் இந்தியன் 2 போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானது திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.