கலைமாமணி விருது தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா…? மத்திய அரசு தகவல்…!!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2019 – 2020 ஆம் வருடத்திற்கான கலைமாமணி விருது தகுதி இல்லாத பல பேருக்கு  அவசரமாக வழங்கப்பட்டிருகிறது. அதனால்  ஆய்வு செய்து தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற விருதுகளை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாந்த் அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து முந்தைய விசாரணையில் நீதிபதிகள் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். இன்றைய விசாரணையில் தமிழக அரசு அதற்கு பதில் அளித்துள்ளது. அந்த வகையில் 2019-ஆம்  வருடத்திற்கான கலைமாமணி விருது தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட இருப்பதாக கூறியுள்ளது. இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை  ஒத்தி வைத்துள்ளனர்.