முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ₹10,000 இருந்து ₹12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பத்திரிக்கை துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து சமுதாய விழிப்புணர்வுக்கு பாடுபட்டு அதிலிருந்து ஓய்வு பெற்று தற்போது வறுமை நிலையில் உள்ள பத்திரிகையாளர்களுடைய சமூகப் பணியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிதி உதவி அளிக்க மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டமானது கடந்த 1986 ஆம் வருடம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது மாதந்தோறும் ரூபாய் 250 ஓய்வு ஊதியம் வழங்கப்பட்டு பின்னர் 4000, 5000 என படிப்படியாக அதிகரித்து கடைசியில் 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.