கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை… தந்தை இல்லாமல் ஸ்டாலின் சந்திக்கும் முதல் தேர்தல்…!!!

சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர்

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது.

இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன்பு அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை செய்தார். கருணாநிதி இல்லாமல் ஸ்டாலின் தலைமையில் முதன் முறையாக திமுக தேர்தலை சந்திக்கிறது