கலெக்டர் அலுவலகம்: திடீரென தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருபவர் ரூபாவதி (38). இவர் கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்க வந்தார். அப்போது ரூபாவதி தான் கொண்டுவந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனையடுத்து காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அவரை தடுத்து நிறுத்தினர்.

அதன்பின் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர், தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனை ரத்துசெய்ய வேண்டும் எனவும் கூறினார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் ரூபாவதிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.