“கலவரத்தை தூண்டுகிறார்” காளி பட போஸ்டருக்கு பிரபல நடிகை கண்டனம்…!!!

பிரபல நடிகை லீனா மணிமேகலையின் மீது கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆவணப்பட இயக்குனராகவும், கவிஞராகவும் வலம் வருபவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய பல ஆவண படங்கள் வெளியாகி ஏராளமான விருதுகளை குவித்துள்ளது. இந்நிலையில் லீனா மணிமேகலை புதிதாக காளி என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் காளி போன்று  வேடம் அணிந்த பெண் எல்ஜிபிடி கொடியுடன் சிகரெட் பிடித்தபடி இருக்கிறார்.  இந்த போஸ்டரை பார்த்த பலரும் இந்த மத நம்பிக்கையை அவமதிக்கும் விதமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நடிகை குஷ்பூ லீனா மணிமேகலையின் ஆவணப்பட போஸ்டருக்கு கடும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், படைப்பாற்றலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றாலும், அதை தவறான முறையில் சித்தரிப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது கலவரத்தை தூண்டும் நடவடிக்கை என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *