கலந்தாய்வுக்கு சென்ற மாணவர்…. வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி பலி…. கோர விபத்து…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுசெல்லூர் கிராமத்தில் கோகுலகிருஷ்ணன்(8) என்பவர் வசித்து வந்துள்ளார். 12-ஆம் வகுப்பு படித்து முடித்த கோகுலகிருஷ்ணன் ஆய்வக நட்புனர் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளார். அதற்காக நடைபெற்ற கலந்தாய்வுக்கு சென்றுவிட்டு நேற்று கோகுல கிருஷ்ணன் பேருந்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தியாகதுருகம் புறவழி சாலையில் இருக்கும் தனியார் உணவகம் அருகே இறங்கி கிருஷ்ணன் சாலையோரமாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது கோவை நோக்கி வேகமாக சென்ற கார் கோகுலகிருஷ்ணன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று கோகுல கிருஷ்ணனின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார் ஓட்டுனரான நந்தகுமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.