நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர். அவர் தமிழ் முட்டாள்களின் மொழி, தமிழ் சனியன், தமிழில் என்ன இருக்கிறது என்றெல்லாம் கூறியுள்ளார். நீங்கள் கன்னடன். கர்நாடக நாட்டில் பிறந்தவர். நீங்கள் என் நாட்டில் அமர்ந்து என் மொழியை கொச்சைப்படுத்துவதா?. தமிழ் மட்டும்தான் சூத்திரம் என்று சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளதா. நான் இன்னும் பெரியார் பற்றி முழுமையாக பேசவே தொடங்கவில்லை. என் மொழியை தாழ்த்தி பேசுவதற்கு பெரியார் யார். அதற்கான அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது. என்னுடைய மொழி அடிப்படையில் முட்டாள்களின் மொழி என்றால் உங்களை முட்டாள்களின் தலைவர் என்றுதானே சொல்ல வேண்டும். தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி என்றால் உங்களை காட்டுமிராண்டிகளின் தலைவன் என்று தானே சொல்ல வேண்டும்.‌

பெண்களுக்கு தாலி அடிமை என்று சின்னம் அது அடிமைப்படுத்துகிறது அதனை கழற்றி எரியுங்கள் என்று சொன்னதால் அதனை திராவிடர் கழகம் பொது மேடையில் வைத்து ஏற்றுக்கொண்டு அந்த பணியையும் செய்கிறது. அதே பெரியார் கர்ப்பப்பையை வெட்டி எடு. நீ பிள்ளையைப் பெற்றெடுக்கும் இயந்திரம் கிடையாது. அது உன்னை அடிமைப்படுத்துகிறது என்று கூறினார். ஆனால் யாரும் மேடையில் வைத்து ஏன் கர்ப்பப்பையை அறுத்து எறியவில்லை. குறிப்பாக அக்கா அருள்மொழியும், கனிமொழியும், அம்மையார் சுந்தரவள்ளியும் எதற்காக கர்ப்பப்பையை அறுத்து எறியவில்லை. குழந்தையைப் பெற்று தானே எடுத்தீர்கள். எப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி பெரியாரை பின்பற்றுகிறீர்கள் என்று கூற முடியும். மேலும் பெரியார் கல்வி கட்சி கொடுக்கவில்லை காமராஜர்தான் கற்றுக் கொடுத்தார். மேலும் பெரியாரின் பேச்சுக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் நான் கண்டிப்பாக பதிலளிப்பேன் என்றார்.