தமிழகத்தில் 3.75 லட்சம் கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி கொடுக்க காலதாமதம் ஆகியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் விரைவில் நிதி உதவி கிடைக்கும் என உறுதி அளித்துள்ளார்.
முதல் இரண்டு குழந்தைகள் பெறும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பேறுக்கால நிதி உதவியாக 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை கடந்த சில வருடங்களாக கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அமைச்சரின் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.