கர்ப்பமான 10 வயது சிறுமி…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

10 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிப்பாளையம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்பார்வையற்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் தனது மனைவியையும், குழந்தையையும் கவனித்துக் கொள்வதற்காக உறவினர் ஒருவரின் 10 வயது மகளை மணிகண்டன் தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். இதனை அடுத்து அந்த சிறுமியை மணிகண்டன் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானார்.

இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மணிகண்டன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *