தமிழ் திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நாயகியாக வலம்வந்தவர் நடிகை நமீதா. இவர் கதைக்கு பதில் கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்ட அவரது சினிமா மார்க்கெட் அப்படியே சரிந்தது. இதையடுத்து பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற நமீதாவிற்கு, பின் எந்த ஒரு பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. இவர் கடந்த 2017 ஆம் வருடம் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சென்ற வருடம் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் நமீதாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான்ராஜ் என தன் இரட்டைக் குழந்தைகளுக்கு நமீதா பெயர் வைத்துள்ளார். இந்நிலையில் நமீதா தன் கர்ப்பத்தை ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக வயிற்றின் மேல் கை வைத்தவாறு உள்ள அச்சை எடுத்து அதில் வர்ணம் பூசி சிலை போல் தன் வீட்டில் செய்து வைத்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.