வட இந்தியா முழுவதும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்பா நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நடனமாடும் பலர் மூச்சிரைப்பு உள்ளிட்ட பல காரணங்களால் மரணமடையும் சம்பவங்கள் நடைபெற்றன. இந்நிலையில், குஜராத்தில் கர்பா நடனமாடிய போது 17 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கார்பா நடனமாடி மகிழ்வது அம்மாநில மக்களின் வழக்கம். அப்படி கார்பா நடனமாடும் போது வெவ்வேறு இடங்களில் 10 பேர் பலியாகியுள்ளனர். இதில் 13 – 24 வயது வரை உள்ள சிறுவர்கள், இளைஞர்களே உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.