கர்நாடகாவில் 7 லட்சத்தை எட்டும்… கொரோனா பாதிப்பு… திணறும் மக்கள்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 9,523 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,00,786 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,966 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9,091 பேர் இன்று ஒரே நாளில்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அதனால் தற்போது வரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,80,054 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் 18,851 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்”என்று அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *