கர்ணன் யுத்தம்… தீ குரலில் தெறிக்கவிடும் ‘உட்ராதீங்க எப்போவ்’ பாடல்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் நான்காவது பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ . இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற கர்ணன் அழைப்பு, மஞ்சனத்தி புராணம், திரௌபதை முத்தம் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்தப் படத்தின் நான்காவது பாடலான கர்ணன் யுத்தம் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . ‘உட்ராதீங்க எப்போவ்’ என தொடங்கும் இந்த பாடலை  தீ பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.