‘கர்ணன்’ படத்தின் அட்டகாசமான போஸ்டர்… தனுஷின் முக்கிய அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

‘கர்ணன்’ படத்தின் புதிய போஸ்டரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படும் என தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘கர்ணன்’ படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என்பதை உறுதிப்படுத்தி அட்டகாசமான போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.