கரையானை அழிக்க முயன்ற தந்தை…. உடல் கருகி 7 ஆம் வகுப்பு மாணவி பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

சென்னை பல்லாவரம் அடுத்த அனகா புத்தூர், காயிதேமில்லத் நகரில்  வருபவர் உசேன்பாட்ஷா (42). இவரது மனைவி ஆயிஷா (35). இந்த தம்பதியினரின் மகள் பாத்திமா(13). இவர் அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வந்தார். இதற்கிடையில் உசேன்பாட்ஷா தன் மனைவி, மகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இதனால் அடிக்கடி வீட்டில் கரையான் அரிப்பு ஏற்பட்டுவந்தது. சென்ற 31ஆம் தேதி உசேன்பாட்ஷா பெயிண்டில் கலக்கும் தின்னரை ஊற்றி தீ வைத்து கரையான்கள் மீது காட்டி அழிக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக அருகில் நின்றிருந்த அவரது மகள் பாத்திமா மீது தீப்பிடித்து எரிந்தது. அப்போது உடல் முழுதும் தீபரவியதால் அவர் வலியால் துடிதுடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உசேன்பாட்ஷா, அவரது மனைவி ஆயிஷா இருவரும் மகள் உடலில் எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். இந்நிலையில் அவர்கள் மீதும் தீப்பிடித்து எரிந்தது. அதன்பின் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் உசேன்பாட்ஷா மற்றும் ஆயிஷா இருவரும் லேசான தீக்காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாத்திமா, சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *