தமிழக சட்டசபையில் ஆளுநர் நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது. அதன் பிறகு நேற்று நடந்த திமுக இளைஞரணி விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, என்னை குடும்பத்தினரும், மூத்த நிர்வாகிகளும், மருத்துவரும் இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என்று கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் அத்தனையும் நெறி இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு என்ன காரணம் தெரியுமா.? தமிழ்நாட்டின் பெயர் தமிழ்நாடு என்று சூட்டப்படும் போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விடில் அந்த உயிர் இருந்து என்ன பயன் என அண்ணா கூறினார். இன்னைக்கு தமிழ்நாடு என்று சொல்லக்கூடாதுன்னு ஒருத்தன் புலம்பிட்டு இருக்கானே. அதற்கு மேல விளம்பரம் கொடுக்க வேண்டாம் என்று கூறினார்.

இது பாஜகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதோடு முதல்வர் ஸ்டாலினே ஆளுநரை ஒருமையில் பேசி கட்சியினரை தூண்டி விடுவதாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா நேற்று முதல்வர் ஸ்டாலினை மரியாதை கெட்ட மனிதர் என்று விமர்சித்து இருந்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை எச். ராஜா போட்டுள்ளார். அதில் ஸ்டாலின் ஏன் இப்படி பேசினார். ஈவெரா அண்ணாதுரை, கருணாநிதி, தீப்பொறி ஆறுமுகம், நன்னிலம் நடராஜன், வெற்றி கொண்டான், நாஞ்சில் சம்பத் ரோட் சைடு பாரதி வழி வந்த ஸ்டாலின் கருவில் குற்றம். ஒட்டுமொத்த சனியும் பெயர்ந்து விடியா திமுக முதல்வரோட நாக்குல சனி அமர்க்களமாக உட்கார்ந்து இருக்கு. ஒரு மாநில ஆளுநரை தான் வகிக்கும் பொறுப்பை மறந்து தரங்கெட்ட வார்த்தையில் பேசி முதல்வரோட தரத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் எச். ராஜா தொடர்ந்து முதல்வரை விமர்சித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.