சென்னையில் இன்று அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். அந்த விழாவில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும் அனுப்பி விடுக்கப்பட்டது. ஆனால் தவெக தலைவர் விஜயுடன் பங்கேற்க திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து திருமாவளவன் கூறியதாவது, யாதும் உணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதும் அறிந்தே தவிர்த்தோம். என்னை ஒரு கருவியாக கொண்டு அரசியல் எதிரிகள் காய் நகர்த்த முயற்சிக்கிறார்கள். திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற செயல் திட்டத்தோடு செயல்படுகிறார்கள். திருமாவளவனை விட்டுவிட்டு பதிப்பகம் எதற்காக விழாவை நடத்துகிறது என்று யாருமே கேட்கவில்லை.

விஜய் மட்டும் போதும் திருமா வேண்டாம் என்று பதிப்பகம் முடிவு செய்ததை பற்றி யாரும் பேசவில்லை. திருமா வருத்தப்பட்டாலும் வருத்தப்படட்டும் என்று எப்படி இலகுவாக நகர முடியும். பகைவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகி விடக்கூடாது என்றுதான் முடிவெடுக்க முடியும். திருமாவளவன் யாரும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்று கூறினார். மேலும் விஜயுடன் திருமாவளவன் ஒன்றாக கலந்து கொள்ளாததற்கான விளக்கத்தை அவர் கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது, கருவியாக காய் நகர்த்தும் அளவிற்கு திருமாவளவன் பலவீனமாக இருக்கிறாரா? அம்பேத்கரின் புகழை பாடுவதில் இரும்பாக நின்று உறுதியாக இருக்க வேண்டாமா? அம்பேத்கரின் பெயரை வைத்து தன்னை காய் நகர்த்துகிறார்கள் என்றால் காய் நகர்த்தும் அளவிற்கு தான் பலவீனமாக இருக்கிறேன் என்று திருமாவளவன் சொல்கிறாரா?

இன்று திருமாவளவன் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய கரும்புள்ளி. அவர் அம்பேத்கரை சிறப்பு செய்கிறாரா? இல்லை கூட்டணி சிறப்பு செய்கிறாரா? நாம் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் இன்று முதலமைச்சர் அவரை அனுப்பி வைத்திருக்க வேண்டும். எப்படி பிரதமர் மோடி ராஜ்நாத் சிங்கை அனுப்பி வைத்தாரோ அதேபோல முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருமாவளவனை அனுப்பி வைத்திருக்க வேண்டும். முதலமைச்சருக்கு பயந்து தான் திருமாவளவன் அம்பேத்கரை ஆராதிக்க மறுக்கிறார். இரண்டு பேரையுமே தவறிழைத்தவர்களாக தான் நான் பார்க்கிறேன் என கூறியுள்ளார்