தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜெயம் ரவி. தனக்கான முதல் படத்திலேயே தனி முத்திரையை பதித்த ஜெயம் ரவி அடுத்தடுத்து நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி தற்போது சைரன், இறைவன் மற்றும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு மாலை போட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சுவாமி சரணம் என்ற பதிவோடு  நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு உடை அணிந்து, நெற்றியில் சந்தன குங்குமம் பூசி, கழுத்தில் மாலையோடு இருக்கிறார். மேலும் சபரிமலைக்கு காரில் செல்லும் புகைப்படத்தை ஜெயம் ரவி தற்போது டுவிட்டரில் பகிர்ந்துள்ள நிலையில், அந்தப் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.