கரடி வேஷம் போட்டவங்க வந்தாங்க…. நாடகமாடிய மாமியார்….. போலீஸ் நடவடிக்கை…!!

மருமகளின் தங்க நகைகளை திருடி விட்டு மாமியார் நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆவுடையாள்புரம் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாடசாமி இறந்துவிட்டதால் பார்வதியம்மாள் தனது மகன் ராமகிருஷ்ணன், மருமகள் இசக்கியம்மாள், பேரக்குழந்தைகள் மாதேஷ், கனிஷ்கா போன்றோருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் பார்வதியம்மாள் தனது சகோதரியின் மகளான கணபதி என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கரடி வேடம் அணிந்த 2 மர்ம நபர்கள் தன்னை கட்டிப்போட்டு சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த கணபதி அங்கு விரைந்து சென்று கயிற்றால் கட்டப்பட்டிருந்த பார்வதியம்மாளை விடுவித்துள்ளார். இதனை தொடர்ந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது மகன் மற்றும் மகளை எழுப்பி மர்ம நபர்கள் தன்னை கட்டிப் போட்டு சென்றதாக பார்வதியம்மாள் தெரிவித்துள்ளார். மேலும் பீரோவில் இருந்த நகைகளை சரி பார்க்கும்படி அவர் கூறியுள்ளார். அதன்பிறகு பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டு இசக்கியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ஊருக்குள் யாரும் புதிதாக தரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அப்பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்தபோது முட்புதரில் ஒரு தாளில் நகைகள் பொதிந்த நிலையில் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். அதன்பிறகு பார்வதியம்மாளை பிடித்து விசாரித்த போது அதே பகுதியில் வசிக்கும் தனது தம்பியின் வரதராஜனின் குடும்ப கஷ்டத்தை தீர்க்கும் பொருட்டு மருமகளின் நகைகளை எடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் தங்க நகைகளை கேட்டால் இசக்கியம்மாள் கொடுக்க மாட்டாள் என கருதி நகைகள் திருடு போனதாக பார்வதியம்மாள் நாடகமாடியது தெரியவந்துள்ளது. அதன்பிறகு பார்வதியம்மாளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *