நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் எச்.வினோத் ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அதாவது Traditional Rice conservation Center-இன் உறுப்பினர்களை நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் எச்.வினோத் சந்தித்து பேசிக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தை எச்.வினோத் இயக்குவது உறுதியாகியுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.