கபடி போட்டியை பார்க்க சென்ற மாணவன்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மவுலிவாக்கம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரித்திக் (15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். நேற்று முன்தினம் மவுலிவாக்கம் பகுதியில் இருக்கும் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டியை பார்ப்பதற்காக ரித்திக் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவனின் கை மின்சார கம்பியில் உரசியது. இதனால் படுகாயமடைந்த ரித்திக்கை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *