கன்னி ராசிக்கு…வாக்கு வன்மையால் காரிய வெற்றி பெறுவார்கள்..தொழில் போட்டி நீங்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வெளியூர் வெளிநாடு செல்லக் கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப் பலனை இன்று நீங்கள் அடைய முடியாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் இருக்கட்டும். இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் தான் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்யமுடியும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவிகளும் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பது கொஞ்சம் சிக்கல் இருக்கும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால் காரிய வெற்றி பெறுவார்கள்.

இன்று குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்த்து விட்டால், சிறப்பான முன்னேற்றத்தை நீங்கள் பெறலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் காண முடியாது. கடுமையாக உழைத்தால் மட்டுமே இன்று நீங்கள் பாடங்களை சிறப்பாக படிக்க முடியும். கொஞ்சம் சோம்பேறித்தனம் இல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. இன்று  படித்த பாடத்தை எழுதி பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம் .

அதிர்ஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண்:  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம் நீலம் நிறம்