கன்னி ராசிக்கு… பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும்.. நிதானத்தை கடைபிடியுங்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பெரியவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்ட பணிகளின் மூலம் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும். சேமிப்பு பணத்தில் செலவு செய்வீர்கள். சுற்றுச் சூழ்நிலை தொந்தரவினால் நித்திரை கொஞ்சம் தாமதமாகும். இன்று  உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும் பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். இன்று சிறப்பான முன்னேற்றத்தை எதிர்பார்க்கமுடியும் . இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லை இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் ,அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்டநிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்