கன்னி ராசிக்கு.. நீண்ட நேரம் பணிபுரிய வேண்டும்…பழகிய சிலருக்காக பணம் செலவிடுவீர்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வருமானம் உங்களுக்கு நல்லபடியாகவே உயரும். வாழ்க்கை தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பழகிய சிலருக்காக பணத்தை செலவிடும், சூழ்நிலை அமையும். வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் பணிபுரிய நேரலாம். மறைமுக எதிர்ப்புகள் மாறும். இன்று தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்படும். கொடுக்கல் வாங்கலிலும் எதிர்பார்த்த லாபம் அமையும். பெரிய மனிதர்களின் நட்பு அனுகூலப் பலனை உண்டாக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும்.

பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகவே இருக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். அது மட்டும் இல்லாமல் கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். இன்று  மாணவச் செல்வங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். எந்த ஒரு விஷயத்தையும் அவர்கள் திறமையாக செய்வார்கள். அதுமட்டுமில்லாமல் தேர்வில் நல்ல மதிப்பெண்களையும் அவர்கள் பெறுவார்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

 அதிஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்